Advertisment

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்?

நாங்குநேரி தொகுதியில் பணத்தை மக்களுக்கு விநியோகிக்க முயன்ற நபர்களை மக்கள் பிடித்து வைத்துள்ளன. மேலும் அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் வைத்திருப்பது தெரிய வந்தது.

Advertisment

nanguneri assembly by election money distribution peoples arrested

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை 04.00 மணியளவில் மூலக்கரைப்பட்டி அருகில் இருக்கும் அம்பலம் கிராமத்தின் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள வீட்டில் பணத்துடன் இருந்த 5 பேரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வந்த காரையும் மடக்கி வைத்த மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

Advertisment

nanguneri assembly by election money distribution peoples arrested

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், போலீசார் ஆகியோர் சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து மக்கள் பிடித்து வைத்திருந்த ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அவர்களிடம் கட்டுக்கட்டாக இருந்த ரூபாய் 2000 நோட்டுக்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

assembly By election money distribution nanguneri Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe