Advertisment

நாங்குநேரி தொகுதியில் திமுக எம்எல்ஏ சிறைபிடிப்பு!

நாங்குநேரி தொகுதியில் பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவண்குமாரை மக்கள் சிறைப்பிடித்தனர்.

Advertisment

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகிலுள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவை சேர்ந்த பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சரவணகுமார் தங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ரூபாய் 2000 வழங்கியதாக குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் அம்பலம் கிராமத்தை சேர்ந்த மக்கள் எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேரை சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படைக்கும், காவல்துறைக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

NANGUNERI ASSEMBLY BY ELECTION DMK MLA ARRESTED PEOPLES

இதனையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த தேர்தல் அதிகாரிகள் ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளன. மேலும் எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேரை அதிகாரிகளிடம் மக்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, எம்.எல்.ஏ தரப்பு தங்கள் செலவுக்கு தேவையான பணத்தை வைத்திருந்ததாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிராம மக்கள் ஏற்கனவே தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

assembly By election money distribution nanguneri Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe