Skip to main content

நந்தனம், வளசரவாக்கம் வீடுகளிலும் தொடரும் சோதனை! (படங்கள்)

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில், தற்போது நந்தனம் எக்ஸ்டென்ஷன் ரோடு, வெங்கடேஸ்வரா மருத்துவமனை பின்புறம் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் வளசரவாக்கம், பெத்தானியா சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் வீடு மற்றும் மந்தைவெளி ராஜா தெருவில உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திலும் சோதனையானது நடைபெற்றுவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.