Skip to main content

பறவைகள் சரணாலயமாகியது 'நஞ்சராயன் குளம்'

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

'Nancharayan Kulam' becomes Tamil Nadu's 17th bird sanctuary

 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17 ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

ஊத்துக்குளியை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு  உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 181 பறவை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நில நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உன்னி கொக்கு, மடையான் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும், தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி என வெளிநாட்டு பறவைகளும் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு நஞ்சராயன் குளம் பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதற்காக பறவைகள் தங்க மணல் திட்டுகள், புல் திட்டுக்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

இந்தியாவிலேயே காணக் கிடைக்காத அரியவகை பறவை; கன்னியாகுமரியில் கண்டுபிடிப்பு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
rare bird that came to Kanyakumari from abroad

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் தமிழகத்திற்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு வலசை வருகின்ற பறவைகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சென்று தஞ்சமடைகின்றன. இவ்வாறு வலசை வருகின்றதை கொண்டாடும் வகையில் உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் வடகோளத்தை சேர்ந்த பறவைகள், அங்கு பனிப் பொழிவு தொடங்கும் போது, உணவு மற்றும் இதமான தட்பவெப்பம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அப்போது, உணவு மற்றும் தட்ப வெப்ப சூழல் முறையாக இருக்கும் பகுதிகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு இடம் பெயர ஆரம்பிக்கும் பறவைகள் இந்தியாவிற்கும் வருவது வழக்கம். அதன் பின்னர், சில மாதங்களுக்கு பிறகு வடகோளத்தில் பனிப் பொழிவு குறைந்து, பகல் பொழுது அதிகரிக்கும். அந்த சமயத்தில், இடம் பெயர்ந்து வந்த பறவைகள் அனைத்தும் மறுபடியும் அதனதன் பகுதிக்கு சென்றுவிடும். இவ்வாறு பறவைகள் வலசை வருவது சங்க இலக்கிய காலம் தொட்டு காணப்படுகிறது. இதற்கு சான்றாக பல சங்க இலக்கிய பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்கு இந்தியாவில் காணப்படாத அரிய வகை பறவையொன்று வந்துள்ளது. பார்ப்பதற்கு ஆந்தை வகையைப் போல இருந்த அந்தப் பறவை தனது உடலில் காயத்தோடு ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ளது. இதனைக் கண்ட காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் இந்த அரிய வகை பறவையை அங்கே அமரவிடாமல் துரத்தியுள்ளன. பின்னர், அங்கு வந்த அரண்மனை ஊழியர்கள் இதனைக் கவனித்துள்ளனர். உடனே காகம் உள்ளிட்ட பறவைகளை துரத்திவிட்டு, அந்த அரிய வகைப் பறவையை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர், இந்த அரண்மனைக்கு அருகிலேயே இருக்கும் உதயகிரி கோட்டை பல்லூயிரின பூங்காவிற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர். அப்போது அந்தப் பறவையைப் பார்த்த பூங்காவில் உள்ள நிர்வாகிகள், இது அயல் நாட்டில் வாழ்கின்ற அரியவகை ஆந்தை இனம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர், காயத்தோடு இருந்த அந்தப் பறவைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பூங்கா ஊழியர்களிடம் கேட்ட போது, அந்தப் பறவைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பறக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் காயம் குணமாகும் வரை, அவற்றை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பறவை குணமடைந்த பிறகு அதனை திறந்து விடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பறவை ஆர்வலர்களிடம் கேட்ட போது, பொதுவாக ஏப்ரல், மே மாதங்களின் போது பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இந்தியாவிற்கு வருவது வழக்கம். இவ்வாறு வருகின்ற சில அரிய வகை பறவைகளை இங்குள்ள பறவைகள் கொத்தி காயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து விடும். பின்னர், இங்கு சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் அவைகள் வசித்த நாட்டுக்கே மறுபடியும் பறந்து விடும். இவ்வாறு பறவைகள் வலசை வந்து திரும்பும் நாளை ஆண்டு தோறும் மே, 10, 11 ஆம் தேதி உலக வலசை பறவைகள் தினமாக கொண்டாடுகின்றனர். உணவு தேடலுக்காக, தென்பகுதிக்கு சென்ற பறவைகள், வடபகுதிக்கு திரும்பும்போது, அவற்றை வரவேற்கும் விதமாக, அமெரிக்கர்கள் இந்த நாளை கொண்டாடுகின்றனர். நம் நாட்டில், வலசை வரும் பறவைகளை வரவேற்க, தனியாக எந்த நாளும் கடைபிடிப்பது வழக்கமில்லை எனக் கூறுகின்றனர்.