'Nancharayan Kulam' becomes Tamil Nadu's 17th bird sanctuary

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்துள்ள நஞ்சராயன் குளம் தமிழகத்தின் 17 ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

ஊத்துக்குளியை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 181 பறவை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. மஞ்சள் மூக்கு நாரை, பழுப்பு நாரை, செந்நில நாரை, பெரிய கொக்கு, நடுத்தர கொக்கு, சிறிய கொக்கு, உன்னி கொக்கு, மடையான் உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும், தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, மண்கொத்தி, சதுப்பு மண்கொத்தி என வெளிநாட்டு பறவைகளும் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு நஞ்சராயன் குளம் பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதற்காக பறவைகள் தங்க மணல் திட்டுகள், புல் திட்டுக்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.