Namma Oor Thiruvizha.. Chennai Sangamam program

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தீவுத் திடலில் (13.01.2023) மாலை 05:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை சங்கமம்விழாவைத்தொடங்கிவைத்து உரையாற்றுகிறார். திமுக துணைப்பொதுச்செயலாளர்கனிமொழிஎம்.பி, தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுஉள்ளிட்டோர்பங்கேற்க உள்ளனர்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரால்தொடங்கிவைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கானநிகழ்ச்சிகளைக்கனிமொழிஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகள் கழித்துதற்போதுமீண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதியிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில்செம்மொழிப்பூங்கா,பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் ஜனவரி 14 முதல் 17 வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை நகர மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.