Skip to main content

பத்திரிக்கையாளர் நமீதா ..!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
n

 

சரத்குமார் நடித்த சத்ரபதி பட இயக்குனர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அகம்பாவம்.   முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நாயகி நமீதா நடித்துள்ளார்.   கதையை எழுதிய  வாராகி வில்லனாகவும் முக்கிய வேடத்தில் சாதிகட்சி தலைவராக நடித்துள்ளார்.  நகைச்சுவையில் மனோபாலாவும், அப்புகுட்டியும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் நாடோடிகள் கோபால் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ஜெகதீஸ்விஸ்வம், கோலிசோடா பட இசையமைப்பாளர் அருணகிரி இப்படத்திக்கு இசையமைத்துள்ளார்.   எடிட்டிங் சின்னுசத்தீஸ், மக்கள் தொடர்பு சரவணன் என்று கலைகட்டும் சூட்டிங் ஸ்பாட்டில்,  இப்படத்தில்  நமீதா பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.  இது  ஆக்சன் மூவி.  சமுதாயத்திற்கு எதிரான ஜாதி மோதலுக்கு எதிரான  கருவை கொண்டு படமாக்கியுள்ளனர். இப்படத்தில் வரும் ஆக்ஸ்சன் காட்சிக்காக பிரெத்தியேக சண்டை பயிற்சி கடந்த இரண்டுமாதமாக எடுத்துவந்துள்ள நமீதா அது குறித்து அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டி ...

 

n

 

நக்கீரன் : இப்படத்தை பற்றிய உங்கள் கருத்து ..?
நமீதா : நான் இதுவரை நடித்ததில் நடிகையை மையமாக கதை கொண்டு நான் நடிக்கும் முதல் படம் இது. மிகவும் மகிழ்ச்சி.

 

நக்கீரன் : இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரத்தை பற்றி ..?
நமீதா :இப்படத்தில் முதல் முறையாக பத்திரிகையாளராக நடிக்கிறேன். மீடியா பவர் பற்றி வெளியிலிருந்து பார்த்துள்ளேன். அதே கதாபாத்திரமாக நடிக்கும் போது மனநிறைவு.  அதே வேலை நக்கீரன் பற்றி புலனாய்வு பற்றியும் கேள்விபட்டிருக்கிறேன். அதே போல தைரியமாக சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை தட்டி கேட்கும் படம் இது.

 

n

 

நக்கீரன் : கதை பற்றி ..?
நமீதா :முதலே சொன்னது தான்.  சமூகத்தில் நடக்கும் சாதி, மதம் என்ற பெயரில் நடக்கும் மக்களுக்கு எதிரான அவலத்தை எதிர்த்து சாதி கட்சி தலைவர்களை எதிர்க்கும் படம்.

 

n

 

நக்கீரன் : படத்தில் சண்டை காட்சியில் நடிக்க கடுமையான பயிற்சிகள் எடுத்து வருகிறீர்களாமே ..?
நமீதா : ஆமாம். கடந்த இரண்டு மாதமாக தனி பயிற்சி எடுத்துவருகிறேன். சாதாரண தற்காப்பு கலை தான்.  ஆனால் குழந்தையாக இருந்த போது தரையில் பல குட்டிகரனம் அடித்துளேன். இப்போது அது செய்வது மட்டும் கடினமாக உள்ளது. மற்றபடி எளிய பயிற்சிகள் தான். 

 

n

 

நக்கீரன் : அகம்பாவம் படக்குழு பற்றி ..?
நமீதா : எல்லோரும் நட்பாக குடும்பமாக இருந்து கடந்த 50 நாட்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டோம்.  இந்த டீம் பொருத்தவரை வாராகி மற்றும் குழுவினர் எளிமையாகவே உள்ளனர்.  படத்தை திரையரங்கில் பார்க்கவும்.  குடும்பத்துடன் பார்க வேண்டிய படம்.  இது வரை கிளாமர் வேடத்தில் பார்த்த நமீதாவை ஆக்ஷன் நமீதாவாக பார்ப்பீர்கள். இந்த படம் என் சினிமா வாழ்வில் அடுத்த லெவல்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நமீதா மீட்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Namitha Rescued from cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் நடிகை நமீதா துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிக்கித் தவித்தார். அவரை தி.மு.க வட்டச் செயலாளர் ஏ.கே. ஆனந்த் தலைமையில் சென்ற தன்னார்வலர்கள் மீட்புப் பணிக்குழு பத்திரமாக மீட்டனர். அவரோடு சேர்த்து அப்பகுதியில் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டோர் 8 படகுகளில் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   

 

 

Next Story

'உடல்நிலை சரியில்லை...' - நமீதாவின் கணவர் கடிதம்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

nn

 

கடந்த 30 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ கவுன்சில் கூட்டத்தில் அதன் மாநிலத் தலைவரான நமீதாவின் கணவர் சவுத்ரி பங்கேற்றார். ஒன்றிய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. சேலத்தைச் சேர்ந்த கோபாலசாமி என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ஒன்றிய அரசின் முத்திரை மற்றும் தேசியக் கொடியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக முத்துராமன், துஷ்யன் என்ற இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். எம்.எஸ்.எம்.இ கவுன்சில் தமிழ்நாடு தலைவர் பதவிக்கு 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதில் நமீதாவின் கணவர் சவுத்ரி மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் மஞ்சுநாத் ஆகியோருக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், எம்.எஸ்.எம்.இ மோசடி வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நமீதாவின் கணவர் சவுத்ரி போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.