
தனது பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என நடிகர் அஜித்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தன்னுடைய மேலாளராகசுரேஷ் சந்திரா மட்டுமே பணியாற்றுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித்பெயரை பயன்படுத்துவர்களை நம்ப வேண்டாம் எனவும் சில தனிநபர்கள் பொதுவெளியில் அஜித் சார்பாக அவரது பிரதிநிதி போல்செயல்பட்டு வருகின்றனர் எனவும் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின்வழக்கறிஞர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக அஜித்பெயரைச் சிலர்முன்னிறுத்திக் கொள்வதாகக் கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
Follow Us