Advertisment

ஆய்வில் தென்பட்ட பெயர்; கருப்பு மையால் அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ் 

Name found in the survey; Minister Anbil Mahesh destroyed with black ink

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் உள்ளஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி அமைத்தார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி பெயர்ப் பலகையில் 'அரிசன காலனி' என பெயர் இடம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட சமூக மக்களை குறிக்கும் வகையில் இடம் பெற்றிருந்த அந்த பெயரை அகற்ற வேண்டும் என தொடர்ந்து அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பெயரை மாற்ற வேண்டும் என அந்த ஊரைச் சேர்ந்த பெரியவரான கணேசன் என்பவர் போராடி அதற்கான அரசாணையைப் பெற்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி இருந்தார்.

Advertisment

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்'அரிசன காலனி' என்ற பெயரை மாற்றுவதற்காக போராடிய கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை அளித்ததோடு தன்னுடைய கைலேயே கருப்பு மையால் அரிசன காலனி என எழுதப்பட்டிருந்த வார்த்தைகளை அழித்தார்.

namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe