name of fitness; Youth arrested

புதுச்சேரியில் பிட்னஸ் என்ற பெயரில் ஆபாசமாக வீடியோ காலில் பேசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பிட்னஸ் ப்ரீக்' என்ற பக்கத்தில் ஒரே நாளில் உங்கள் எடையை குறைக்கலாம் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. இதனை நம்பி புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் சிலர் அந்த இன்ஸ்டா பக்கத்தை பார்வையிட்டு அந்த பக்கத்தின் அட்மினுக்கு மெசேஜ் செய்து உள்ளனர். உங்களுடைய ஆடை இல்லாத புகைப்படங்களை அனுப்பினால் எந்த விதமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து பரிந்துரைப்போம் என கூறியதை நம்பியும், பெண் உடற்பயிற்சி வல்லுநர்கள் கேட்கிறார்கள் என நம்பியும் சில பெண்கள் படங்களை அனுப்பியுள்ளனர்.

Advertisment

அதற்கான சில உடற்பயிற்சி குறிப்புகளும் அந்த பக்கத்திலிருந்து பதிலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் திடீரென வேறொரு இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து உங்களுடைய புகைப்படம் என்னிடம் இருக்கிறது. வீடியோ காலில் ஆடையின்றி தோன்ற வேண்டும் என மிரட்டல் வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம்புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுஇது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் இந்தச் செயலில் ஈடுபட்டது ஒரு ஆண் என்பது தெரிய வந்தது. முத்தியால்பேட்டையை சேர்ந்த திவாகர் என்ற அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திவாகரின் செல்போனில் ஆபாசப் பல புகைப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.