Skip to main content

"பேஸ்புக்" (Facebook) சமூக வலைதளத்தில் வேட்பாளர்களின் பெயரை அறியலாம்!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

உலகில் உள்ள சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனம் "பேஸ்புக்" ஆகும். உலகம் முழுவதும் சுமார் 75% மேற்பட்டோர் "பேஸ்புக்" சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வரும் "பேஸ்புக்" (Facebook) கணக்கு தொடங்கும் போது அதில் அவர்கள் தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் மாநிலத்தை குறிப்பிட வேண்டும் என்பது அதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெறுவதை அடுத்து "பேஸ்புக்" பயன்படுத்துவோர்களுக்கு " உங்கள் மாவட்டத்தில் மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெயர்களை " கொண்ட பட்டியலைப்  "பேஸ்புக் நிறுவனம்" பேஸ்புக் பயனாளர்கள் எளிதில் அறியும் வகையில் அவரவர் மாவட்ட வேட்பாளர்கள் புகைப்படத்துடன் காணும் வகையில் "பேஸ்புக்" நிறுவனம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

 

candidates



இதனால் அனைவரும் வாக்களிக்கவும் , 100% வாக்கு பதிவு இலக்கை எட்டவும் "பேஸ்புக்" நிறுவனம் இத்தகைய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு வரும் "பேஸ்புக்"   (Log in )செய்தால் அதில் (Time line) -ல் தங்களின் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என அறிய விருப்பமா ? என கேட்கும் . ஆம் என்றால் (See the candidates) என்ற Option இடம் பெற்றிருக்கும். பின்பு அந்த Option -யை கிளிக் செய்தால் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறியலாம்.  இந்த புதிய வசதியை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் "பேஸ்புக்" நிறுவனத்தை பாராட்டியுள்ளனர்.


பி.சந்தோஷ், சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

சென்டினலை அடுத்த சோம்பன்; வாக்களிக்க வைத்த தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Somban next to Sentinel; The Election Commission held the vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.  சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம்.  வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.

அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும்  அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்  சோம்பன் மக்களிடம்  வாக்களிப்பதின்  அவசியத்தை  உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.