Advertisment

மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நம்பியார் நகர் மீனவர்கள்!

Nambiar Nagar fishermen on strike for third day

Advertisment

கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள் இன்றுமுதல் (17.07.2021) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

கூட்டத்தில் கடலோர மீன்பிடி சட்டத்தை மீறும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ள நாகை நம்பியார் நகர் மீனவர்கள், இன்றுமுதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நம்பியார் நகர் கிராமத்தில் போராட்டத்தைத் தொடங்கியுள்ள மீனவர்கள், ‘மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

மூன்றாவது நாளாக இன்று கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருப்பதால், நம்பியார் நகர் கடற்கரையில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

strike Fishermen Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe