Advertisment

8 வழிச்சாலை திட்டத்திலும், ஸ்டெர்லைட் விவகாரத்திலும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் ரஜினிகாந்த்: நமது அம்மா பாராட்டு

8 வழிச்சாலை திட்டத்திலும், ஸ்டெர்லைட் விவகாரத்திலும் உண்ணையை உரக்கச் சொல்லியிருக்கும் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் என நமது அம்மா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

Advertisment

எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் நாட்டுக்கும் நலம் பயக்கும் திட்டம் என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை ‘உரக்கச் சொன்ன உச்சநட்சத்திரம்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் "நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம்" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார். மேலும் கழக அரசின் கல்வி புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

உச்சி வெயில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிசான் என்று எதற்கெலுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிற உள்நோக்க சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைக்கல்லாக நின்று உரசிப்பார்த்து வரவேற்றிருப்பது பாராட்குரியது.

ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும், அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட திமுக உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதும் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார். இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே... வரவேற்போம்... வாழ்த்துவோமே என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

namathu amma rajini
இதையும் படியுங்கள்
Subscribe