காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், நமச்சிவாயம் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுச்சேரிக்கு வரும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில்பா.ஜ.க.வில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஜினாமா செய்த நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரைசந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நேற்றே டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.