/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/0132_0.jpg)
புதுச்சேரியில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நமச்சிவாயம் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதுச்சேரிக்கு வரும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஜினாமா செய்த நமச்சிவாயம் ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு,பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை நமச்சிவாயம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)