Skip to main content

நாட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலி! 2 நண்பர்கள் கைது!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

namakkal youths incident police investigation


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குமாரபாளையம் மேற்கு காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவன். இவருடைய மகன் சக்திவேல் (24). இவரும், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த மங்களபுரத்தைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் தோனி என்கிற பாபு, மங்களபுரம் ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செந்தில்குமார் ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி இரவு நேரங்களில் மங்களபுரம் அருகே உள்ள சிங்கிலியன்கோம்பை மலைப்பகுதியில் முயல் வேட்டைக்குச் செல்வது வழக்கம். 
 


அதன்படி, புதன்கிழமை (மே 27- ஆம் தேதி) இரவு 11.00 மணியளவில், மூவரும் முயல்வேட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேட்டையாடும் பகுதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது சக்திவேல், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். திடீரென்று கைத்தவறி துப்பாக்கி விசை மீது விரல்கள் மோதியதில் திடீரென்று துப்பாக்கி வெடித்தது. இதில் சக்திவேல் மீது பால்ரஸ் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், தோனி ஆகியோர் சக்திவேலின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வாழப்பாடிக்குச் சென்றனர். அங்கு சக்திவேலின் வீட்டின் முன்பு அவருடைய சடலத்தை வீசி விட்டு இருவரும் தப்பிச்சென்று விட்டனர். மறுநாள் (மே 28- ஆம் தேதி) அதிகாலையில் வீட்டு முன்பு சக்திவேல் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த குடும்பத்தினர், இதுகுறித்து மங்களபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

 


விசாரணையில் தற்செயல் விபத்து மூலம் துப்பாக்கி வெடித்து சக்திவேல் பலியாகி இருப்பது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தோனி, செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

“எவ்ளோ தைரியம் இருந்தா கோவிலுக்குள்ளே வருவீங்க” - பட்டியலின இளைஞர்களை தாக்கிய கும்பல்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

  mob attacked youths who had come to worship at the temple

 

மதுரையில் கோவிலுக்குள்ளே சென்ற பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதிக்கு அருகே உள்ளது மையிட்டான்பட்டி கிராமம். இந்த ஊரில் உள்ள முக்கியத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது முத்தாலம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த முத்தாலம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இரண்டு நாட்களுக்கு கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோஷ்டி மோதல் காரணமாக இந்த கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், அந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்து தமிழக அரசின் அனுமதியுடன் கடந்த 24 ஆம் தேதியன்று கோயில் திருவிழா தொடங்கியுள்ளது. ஊர்மக்களின் ஆரவாரம், நேர்த்திக்கடன்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என விமரிசையாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று மையிட்டான்பட்டி கிராம மக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வந்துள்ளனர். அப்போது மையிட்டான்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விஜயபாண்டி மற்றும் அவரது நண்பர் மகேஸ்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

 

மேலும், அங்கு மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் பங்கேற்றிருந்தனர். இத்தகைய சூழலில் இரு பிரிவினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர், "நீங்கலாம் எந்த சாதிக்காரங்கடா.. எவ்ளோ தைரியம் இருந்தா கோயிலுக்குள்ளே வருவீங்க. உங்கள யாருடா உள்ள விட்டது என சாதி பெயரைக் கூறி இழிவாகப் பேசியதுடன் அவர்களை கண்மூடித்தனமாக சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்த சமயம் அங்கிருந்த கிராம மக்கள் சிலர் காயமடைந்த இரண்டு இளைஞர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதே நேரம், கோயில் திருவிழாவில் கலவரத்தை உண்டாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட பிரவீன், மருதுபாண்டி, ஐயப்பன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவில் திருவிழாவில் நடந்த இந்த மோதல் சம்பவம் கள்ளிக்குடி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.