இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறையின் அமைச்சராகப்பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தின்சார்பில் நலத்திட்டஉதவிகள்வழங்குதல், முடிவுற்ற பணிகளைத்தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதலுக்கானஅரசு விழாநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டைமேடுஎன்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின்முடிவில் தேசிய கீதம்ஒலிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தநாமக்கல் ஆயுதப்படையைச் சேர்ந்தசிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் என்பவர் தேசிய கீதம்ஒலிப்பதை கவனிக்காமல் செல்போனில் பேசியபடியே எழுந்துநிற்காமல் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
சிவப்பிரகாசம்இவ்வாறு செல்போனில் பேசிக்கொண்டுஇருப்பதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவானதுவைரலான நிலையில் நாமக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சிவப்பிரகாசத்தைபணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர்மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.