Skip to main content

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு... தொடரும் தடை! - புதிய ஆட்சியர் அறிவிப்பு!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

jkl

 

வட கிழக்குப் பருவ மழையின் கனமழை காரணமாக அருவிகளின் நகரமான தென்காசி மாவட்டத்தின் குற்றால தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியிருக்கிறது. விளைவு குற்றால அருவிகளில் வௌளப் பெருக்கு. குறிப்பாக மெயினருவியில் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் போன்று பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. அருவியின் ஆர்ச் பகுதியையும் தாண்டிக் கொட்டுகிறது.

 

தற்போது கரோனாத் தொற்று காரணமாகக் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குறிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே தென்காசி மாவட்டத்தின் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் மாற்றப்பட்டு புதிய கலெக்டராக சமீரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மாவட்டத்தின் வரைவு வாக்காளர்களின் பட்டியலை இன்று வெளியிட்ட அவர், தற்போது கரோனாத் தொற்று மாவட்டத்தில் குறைந்து வருகிறது. இருப்பினும் கரோனாத் தொற்று காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை தொடரும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்