namakkal sendamangalam astrologer incident

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி என்ற பகுதியைச்சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 60). ஜோதிடரானஇவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சுந்தரராஜன் தன்னிடம்ஜோதிடம் பார்க்க வரும் கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்கள்,கணவரை இழந்த பெண்கள் என பலரையும் மயக்கிதனிமையில் இருந்து வந்துள்ளார். இதனைக் கண்டித்து இவரதுமனைவியும் மகன்களும் பிரிந்து சென்று தனியாக வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இதற்கிடையில் தன்னிடம்ஜோதிடம் பார்க்க வந்த அதே பகுதியில் வசிக்கும்கணவரை பிரிந்த பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சுந்தர்ராஜன் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

போலீசார் நடத்திய விசாரணையில் ஜோதிடர் சுந்தர்ராஜன் பார்வதிக்கு தனது வீட்டை எழுதி வைத்துள்ளார். மேலும் ஜோதிடருக்கு சொந்தமான இரண்டு வீட்டு மனைகள் மற்றும் பணத்தை தனது பெயருக்குஎழுதி தரும்படி பார்வதி தொடர்ந்து கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாகஇருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் பார்வதிக்கு சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் பகுதியை சேர்ந்தகார்த்தி ( வயது 24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த சுந்தர்ராஜன், கார்த்தி உடனான பழக்கத்தை கைவிடும்படி பார்வதியை கண்டித்துள்ளார். இதனால் பார்வதி, கார்த்தியுடன் சேர்ந்து சுந்தர்ராஜனை கொலை செய்ய இருவரும திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவுசுந்தர்ராஜனின் வீட்டுக்கு பார்வதி, கார்த்தியுடன் சென்று தூங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜனை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பார்வதி மற்றும் கார்த்திகை போலீசார் கைது செய்துள்ளனர்.