Advertisment

மின்சாரம் தாக்கி டிரைவர் பலி; போலீசார் விசாரணை

namakkal paramathi velur lorry driver incident 

Advertisment

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் காளியண்ணன் மகன் நகல்ராசு (வயது 49). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டிவருகிறார். நேற்று கேரளாவில் இருந்து மரப்பட்டை லோடு ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மூலிமங்கலம் பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் இறக்குவதற்காகச் சென்றுள்ளார்.

லோடு இறக்குவதற்காக லாரியின் மேல் கட்டப்பட்டிருந்த தார்ப்பாயை அவிழ்ப்பதற்கு மேலே சென்றபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் சென்ற மின்சாரக் கம்பியின்மேல்மோதி மின்சாரம் தாக்கி லாரியின் மீது மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம்குறித்து அறிந்த நகல்ராசு மனைவி சுதா (வயது 35), வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றகாவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

karur namakkal police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe