Advertisment

பெண் சிசுக்கொலையா? சடலத்தை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை!

namakkal incident... Police dig up the body and investigate!

நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆனபெண் குழந்தை இறந்த சம்பவத்தில் பெண் சிசுக்கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாகபோலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் புதைக்கப்பட்டபெண் குழந்தையின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்குஅனுப்பிபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் சூர்யா - கஸ்தூரி தம்பதியருக்கு கடந்த 4ஆம் தேதியன்று மூன்றாவது பெண் குழந்தை பிறந்த நிலையில், தாய் கஸ்தூரி பெண் குழந்தையுடன் பிறந்த வீடான பொட்டிரெட்டிப்பட்டியில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை இறந்ததாக, உறவினர்கள் குழந்தையின் உடலை அப்பகுதியிலேயே புதைத்துவிட்டனர். ஆனால் மூன்றாவதாகபெண் குழந்தை பிறந்ததால்பெண் சிசுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்த நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் லலிதா கொடுத்த புகாரின் பேரில், எருமப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று (14.04.2021) புதைக்கப்பட்டபெண் குழந்தையின் சடலடத்தைமீண்டும் தோண்டியெடுத்துபிரேத பரிசோதனை செய்ய முடிவெடுத்தபோலீசார், அதற்கான பணிகளில் இறங்கினர்.

police Baby girl namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe