நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ். இவருக்கு வயது 37. இவர் கொங்கலம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

suresh

ஆசிரியர் சுரேஷ் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுகிறார் என்று சில மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள், “நிர்வாண சிலைகளின் புகைப்படத்தை காட்டுவார். ஆபாசமாக சில வார்த்தைகள் கூறுவார்” என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

Advertisment

மாணவிகளின் மேல் தொட்டு பேசுவதாகவும், வாடி போடி என்று மரியாதை இல்லாமல் மாணவிகளை அழைத்ததாகவும் தெரிகிறது. ஆசிரியரின் இந்த செயல்களை கண்டிப்பதற்காக அவர் செய்த தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவலரிடம் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஆசிரியர் சுரேஷை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisment