Advertisment

பொறியியல் மாணவி கொலை ! பெற்றோரின் செயலால் பள்ளி மாணவி ஆத்திரம் !!

நாமக்கல் கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரன். கூலித்தொழிலாளி.இவருக்கு இரண்டு மகள்கள்.மூத்த மகள் மோனிஷா (18). நாமக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இளைய மகள், பிளஸ்டூ படித்து தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறார்.

Advertisment

ஏப்ரல் 4ம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, \தனது இடப்பக்க கையில் பிளேடால் அறுத்துக் கொண்டதாகச் சொல்லி, அவருடைய பெற்றோர் மகளை நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார்.

NAMAKKAL ENGINEERING STUDENTS INCIDENT  POLICE INVESTIGATION

இதுகுறித்து நாமக்கல் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோனிஷாவின் உடல், அதே மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில், கழுத்து நெரிக்கப்பட்டதால்தான் மோனிஷாவின் மரணம் நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.

Advertisment

காவல்துறை விசாரணையில், மோனிஷாவை அவருடைய தங்கையும், தங்கையின் காதலனும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மோனிஷாவின் தங்கையான 17 வயதான பிளஸ்டூ மாணவி, அவருடைய காதலன் ராகுல் (19) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''மோனிஷாவின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.வீட்டில் அடிக்கடி அக்கா, தங்கை இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.பெற்றோரும் மோனிஷாவிடம் அதிக பாசமாக இருந்துள்ளனர். இதனால் மோனிஷா,பெற்றோர் தன்னை வெறுப்பதற்கு அக்காதான் காரணம் என நினைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியே மோனிஷாவைத் தீர்த்துக்கட்டும் நிலைக்குச் சென்றது.

http://onelink.to/nknapp

கடந்த 4ம் தேதி, அக்காவும் தங்கையும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். மோனிஷாவின் தங்கை பக்கத்துத் தெருவில் இருக்கும் தனது காதலனை வரவழைத்துள்ளார்.பின்னர் இருவரும் சேர்ந்து மோனிஷாவைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.பின்னர் அவருடைய கையில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியிருப்பது தெரிய வந்துள்ளது,'' என்றனர்.

Police investigation incident ENGINEERING STUDENT namakkal district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe