Advertisment

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் கைது- ஒருவருக்கு வலை! 

NAMAKKAL DISTRICT WOMEN INCIDENT POLICE

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் விரட்டி, தங்க செயின் மற்றும் ரூபாய் 2,000 ரொக்கத்தைப் பறித்துள்ளனர். பின்னர், அவர்களை அருகில் இருந்த பயனற்ற கட்டிடத்திற்கு அழைத்து சென்ற அந்த கும்பல், இருவரையும் தாக்கியதோடு, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதனை வீடியோ பதிவும் செய்து, கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கல்லூரி மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

police incident Women
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe