கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அமைச்சர் சரோஜாவின் வெற்றியை எதிர்த்து திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.