சிறுமியிடம் சீண்டல்... முதியவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை!

கோவையைச் சேர்ந்தவர் திருஞானம் (60). இவர், கடந்த திங்கள் கிழமை (ஜன. 27) நாமக்கல் மாவட்டம் ஏஸ் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையில், துக்க வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார்.

namakkal district old man child police arrested

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதே பகுதியைச் சேர்ந்த 3 வயதே ஆன சிறுமி அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை அழைத்த திருஞானம், சிறுமிக்கு விளையாட்டு காட்டுவதுபோல் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மிரண்டுபோன அந்தச் சிறுமி அழத்தொடங்கினாள். குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு பெற்றோர் ஓடிவந்தனர். அதைப்பார்த்து பதறிய திருஞானம், திடீரென்று சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அங்கிருந்தவர்கள் திருஞானத்தை மடக்கிப்பிடித்து, நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறை விசாரணையில் அவர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அவர் திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று (28.01.2020) அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

namakkal district old man police WOMEN CHILD INCIDENT
இதையும் படியுங்கள்
Subscribe