இரண்டு குழந்தைகளை மலையில் இருந்து வீசிய கொடூர தந்தை.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள செம்மேடு சீக்குப்பாறையில் வியூ பாயிண்ட் பகுதியில் இருந்து 150 அடி பள்ளத்தில் இரண்டு குழந்தைகளையும் தூக்கி வீசினார் கொடூர தந்தையான சிரஞ்சீவி. மனைவி உடன் ஏற்பட்ட பிரச்சனையால் மகன் ஸ்ரீராஜ் (8), மகள் கவியரசி (5) ஆகியோரை தந்தை மலையில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.