namakkal district government school teacher transfer

Advertisment

நாமக்கல் அருகே, ஆன்லைன் வகுப்பில் ஆபாசப் படம் காட்டியதாக வந்த புகாரின்பேரில் அரசுப்பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் பாட ஆசிரியராக எடின்பரோ கோமகன் (வயது 53) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம், பள்ளியில் உள்ள இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

இச்சம்பவம் தொர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் உதவி தலைமை ஆசிரியரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தார்.

இதுகுறித்த விசாரணை அறிக்கையை மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார். இந்நிலையில் ஆசிரியர் எடின்பரோ கோமகனை மங்களபுரம் அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலு உத்தரவிட்டார். வாரத்தில் 7 நாள்களும் மங்களபுரம் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மங்களபுரம் அரசுப்பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்த சுந்தராம்பாள், வடுகம் அரசுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.