namakkal district doctor incident

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடலிங்கம் (52). குழந்தைகள் நல மருத்துவர். இவர், கடந்த 20 ஆண்டுகளாக திருச்செங்கோடு சாலையில் சொந்தமாக சிறிய அளவில் ஒரு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

Advertisment

இந்த மருத்துவமனையின் மேல் தளத்தில் அவருடைய வீடு உள்ளது. நேற்று முன்தினம் (டிச. 15) இரவு வழக்கம்போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, மேல் தளத்தில் இருக்கும் தனது வீட்டுக்குச் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்த வெங்கடலிங்கத்தின் குடும்பத்தினர் அவரை, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

Advertisment

மருத்துவர் வெங்கடலிங்கத்திற்கு மனைவி, மகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக அவர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.