Skip to main content

குழந்தைகள் விற்பனை வழக்கு: 4500 பிறப்புச்சான்றிதழ்கள் ஆய்வு!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 

 
சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட ராசிபுரம் செவிலியர் உதவியாளர் அமுதா, குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலமாக போலியாக பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதாகவும், அதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் ஒரு தம்பதியிடம் பேசிய உரையாடல் சமூக ஊடகங்களில் வெளியானது. 

 

r


இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ராசிபுரம் நகராட்சி மூலம் கடந்த 2016-2017, 2017-2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த அலுவலகம் மூலம், மேற்சொன்ன கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 4500 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

 
அதேபோல் கொல்லிமலையில் மட்டும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் 1000 பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று தணிக்கை செய்து வருகின்றனர். இவற்றில் முதல்கட்டமாக 20 பிறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட்டுள்ள குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர்கள் வசம் இல்லாத அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

காவலாளியை கொன்று கால்களை கட்டி தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

passed away the guard and hanging him with his legs tied

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். வழக்கம் போல் கடந்த ஞாயிறு இரவும் பரமசிவம் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை), அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பரமசிவம் சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பரமசிவம், யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.  இதனிடையே உயிரிழந்தவரின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

காவல்துறையினர், சாலை மறியல் செய்தவர்களிடம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பேரூராட்சி அலுவலக காவலாளி மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.