புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கீரமங்கலத்திற்கு வந்திருந்தார்.
அங்கு பிரசாரம் செய்த பிறகுசெய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு மற்றும் அவரது மகள், பேரக்குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அனைவரும் நலமாக உள்ளார்கள் என்று மருத்துவமனை டீன் கூறியுள்ளார்” என்றார்.