Advertisment

நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கப்படும்! தமிமுன் அன்சாரி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் ஓ.பி.எஸ். பதில்

தமிழக சட்டப்பேரவையில் 18.07.209 வியாழக்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

Advertisment

சுதந்திர போராட்ட வீரரும் நமது அனைவரின் அன்புக்குரிய, முதுபெரும் இடதுசாரி தலைவருமான நல்லகண்ணு அவர்கள், தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், பிறகு அவருக்கு அவர் விரும்பும் வகையில் வீடு ஒதுக்கப்படும் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது.இதுகுறித்து"இப்போதைய நிலை என்ன" என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment

nallakannu

அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், நல்லக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகிய இருவரின் தியாகத்தை போற்றும் வகையில் நல்லகண்ணு அவர்களுக்கும், கக்கன் அவர்களின் குடும்பத்திற்கும் வாடகை இல்லாமல் அவர்கள் கேட்கும் வீட்டை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்தார்.

இப்பிரச்சனையை சபையில் எழுப்பியதற்காக தமிமுன் அன்சாரிக்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

goverment house O Panneerselvam R. Nallakannu Tamimun Ansari
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe