7 பேர் விடுதலை செய்யக்கோரி நளினி செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசிற்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில்ரஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என இரண்டு முறை அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பியும், ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்கவில்லை. எனவே தமிழகஅரசு ஏற்றிய தீர்மானத்தின்படி 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் எனக்கூறியிருந்தார்.

Advertisment

Nalini's petition dismissed

அந்த மனுமீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு இன்று சுப்பையா, சரவணன் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் கோர முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்ய தண்டனை கைதிகள்உரிமை கோர முடியாது எனவும் தமிழக அரசுதெரிவித்ததை அடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.