Skip to main content

சிறையில் உணவு உண்ண முடியாமல் அவதிப்படும் நளினி!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

 

nalini


முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 28 வருடங்களாக வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் நளினியும் உள்ளனர்.


இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டனர், அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தமிழ் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் தான். நான் இரட்டை ஆயுள் அனுபவித்துவிட்டேன், அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். திருமண வயதில் என் மகள் உள்ளாள், நானும் சிறையில் உள்ளேன், என் மகளின் தந்தையும், என் கணவருமான முருகனும் சிறையில் உள்ளதால் மனிதாபிமான அடிப்படையிலாவுது விடுதலை செய்ய வேண்டுமென நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார் நளினி.


ராஜிவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சிறையில் புழுங்கிக்கொண்டு உள்ளனர் நளினி உட்பட அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும். இவர்களுக்கு உடல் ரீதியாகவும் பல்வேறு உபத்திரங்கள் உருவாக தொடங்கியுள்ளன. பேரறிவாளன் சிறுநீர் தொற்றால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவமனை என மாறிமாறிச்சென்று சிகிச்சை பெற்றுவருகிறார்.


இந்நிலையில் 50 வயதான நளினிக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் உருவாக தொடங்கியுள்ளதாக சிறைத்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பல்வலியால் கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். சிறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கடந்த ஜீலை 29ந்தேதி நளினிக்கு பல் வலியென வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கினங்க வேலூர் போலிஸார் அழைத்துச்சென்றனர். மருத்துவமனையில் பல்வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்தபின்பும் நளினிக்கு பல்வலி இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உணவு உண்ண முடியாமல் கஸ்டப்படுவதாக சிறைத்துறையினர் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கை அனுப்ப ஏற்பாடு? - மத்திய அரசு பதில்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Arrangement to send four persons including Murugan to Sri Lanka - Central Government's response

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன் அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுதலை செய்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு அவருடைய மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும் அவருக்கு பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டி உள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. அவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் மத்திய அரசின் அயல் நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், விதிகளின்படி இந்திய சிறையிலிருந்து விடுதலை ஆகும் வெளிநாட்டவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட நான்கு பேரும் இலங்கைத் தமிழர்கள். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் கள்ளத்தோணி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். இதன் காரணமாகத் தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.