ராஜிவ் கொலையில் சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி எத்தனையோ போராட்டங்களை யார் யாரோ நடத்தினார்கள். நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு மறுக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்தார்கள். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சீமான் உள்ளிட்ட பல அமைப்புகள் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.

Advertisment

nalini

ஆனால், தனது மகள் திருமணத்தை நடத்த பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை. தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார்.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. சிங்கராயருக்கு சுப.வீரபாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.