Advertisment

முருகன் உண்ணாவிரதமா? மறைக்கிறதா சிறைத்துறை...!

Nalini murugan hunger strike at prison

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதிகளில் ஒருவரான முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அதே வழக்கில் அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அதாவது நவம்பர் 23ஆம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த உண்ணாவிரதம் என்கிற காரணம் வெளியாகவில்லை. கடந்த ஒரு வாரமாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருதாக மட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் உண்ணாவிரதம் இருப்பதாக முறையான கடிதம் வழங்கவில்லை. அதனால் இது அதிகாரபூர்வ உண்ணாவிரதம் என எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

சிறையில் உள்ள ஒரு கைதி, அவருக்கு வழங்கப்படும் உணவை உடல் நலன் நன்றாக இருந்தும் உண்ணாமல், ஒருவேளை உணவை எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்தால் அது உண்ணாவிரதம் கணக்கில்தான் வரும் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்நிலையில் 8 நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உள்ளார் முருகன். சிறைத்துறையோ இது உண்ணாவிரதமில்லை என்கிறது. எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்கிற காரணத்தையும் சிறைத்துறை வெளிப்படுத்த மறுக்கிறது.

Advertisment

கடந்த காலங்களில், தன்னை சிறை மாற்ற வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தனக்கு பரோல் வழங்க வேண்டும், தன் மகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் காலில் பேச அனுமதிக்க வேண்டும், தன் மகனின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய பரோல் வழங்க வேண்டும் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்துள்ளார் முருகன். அப்போதெல்லாம் அதிகாரிகள் சமாதானம் செய்து உண்ணாவிரதத்தை கைவிட செய்துள்ளனர். இப்போது என்ன காரணத்துக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்கிற காரணத்தையே சிறைத்துறை வெளியிட மறுத்துவருகிறது.

Prison Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe