nalini1

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே-7ம் தேதிக்குள் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் ஆஜரானார். அதற்கான கட்டணமாக அவர் ரூ.1 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. சாரதா சிட்பண்ட் மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமலாக்கத் துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக அவருக்கு கடந்த 2016 செப்டம்பரில் சம்மன் அனுப்பினர்.

Advertisment

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, சம்மனுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து வயதானவர்கள், நேரில் ஆஜராக முடியாதவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மட்டுமே விதிவிலக்கு கோர முடியும். மூத்த வழக்கறிஞரான நளினி சிதம்பரம், உச்ச நீதிமன்றம் மட்டுமின்றி பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் ஆஜராகி வருபவர். இதை அவரே தனது மனுவில் கூறியுள்ளார். உண்மையை வெளியே கொண்டு வர சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து மே-7ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.