ADVERTISEMENT

8 வழிச்சாலை எதிர்ப்பில் விவசாயிகளோடு துணை நின்றது நக்கீரன் – ஒருங்கிணைப்பாளர் பேட்டி

03:48 PM Apr 08, 2019 | raja@nakkheeran.in

சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தொடங்க அதிமுக அரசாங்கத்தால் அறிவிப்பு வெளியிட்டது முதல், தேசிய அளவில் பல தலைவர்களை அழைத்துவந்தது விவசாயிகளை ஒருங்கிணைத்து தருமபுரி, சென்னை, சேலம், திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தி, மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகளின் கருத்துக்களை எடுத்து வைத்தவர் சி.பி.எம் கட்சியின் விவசாய பிரிவின் நிர்வாகி அழகேசன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அழகேசன், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து நம்மிடம் பேசினார். அவர் தெரிவித்ததாவது, “இந்த 8 வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 127 கி.மீ பயணிக்கிறது. இந்த சாலை மட்டும் வந்து இருந்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1500 ஹெக்டர் விவசாய நிலம் சாலையாக மாறியிருக்கும். அந்த சாலைகளின் ஒரம் உள்ள நிலங்கள் மலடாகியிருக்கும்.


அப்படி ஏதுவும் நடக்ககூடாது என்பதாலேயே காவல்துறையின் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை எதிர்த்தோம், போராடினோம், வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி என்பது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றிக்காக விவசாயிகளோடு ஆரம்பம் முதல் முன்னின்ற பத்திரிகைகளில் நக்கீரனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. தொடர்ச்சியாக அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தபடி இருந்தது. விவசாயிகளின் பக்கம் நின்று செய்திகளை வெளியிட்டது. அதற்காக விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT