கோவை மாவட்டம் சூலூர் அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கனகராஜ் ஆவர். இவர் சமீபத்தில் (21/03/2019) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன். இந்நிலையில் தமிழக அரசின் சட்டப்பேரவை இணையதளத்தில்
http://www.assembly.tn.gov.in/ சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் வரிசையில் சூலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெயர் இருந்ததை "நக்கீரன்" பத்திரிக்கை (25/03/2019) அன்று சுட்டிக்காட்டியது .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-29 at 2.36.18 PM_0.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதனை தொடர்ந்து சூலூர் சட்டமன்ற உறுப்பினர் பெயரை நீக்கி தொகுதி காலியாக உள்ளதாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளது தமிழக அரசு. அதே சமயம் தமிழக சட்டப்பேரவை காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. தமிழக மக்களவை தேர்தலுடன் ,18 சட்டமன்ற இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மக்களவை தேர்தல் முடிந்தவுடன் , இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.சந்தோஷ் , சேலம்.
Follow Us