Nakkheeran news effect Removable posters

‘போஸ்டர்களால் மதுரை ஸ்மார்ட் சிட்டி அலங்கோலம்! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!’ என்னும் தலைப்பில், கடந்த 6-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Advertisment

இன்று (8-ஆம் தேதி) மதுரை பாலம் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்துக்கொண்டிருந்தனர். அங்கு பார்வையிட்ட மேஸ்திரியிடம் விவரம் கேட்டோம். “போன்ல மெசேஜ் வந்திருக்கு. ஒரு வாரத்துக்குள்ள விதிமீறலா ஒட்டப்பட்டிருக்கும் அத்தனை போஸ்டர்களையும் கிழிச்சாகணுமாம்.” என்றார்.

Advertisment

அரசு நிர்வாகம், மதுரையை அலங்கோலப்படுத்தும் சுவரொட்டி விவகாரத்தில் வேகம் காட்டியிருப்பது, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.