Advertisment

நக்கீரன் செய்தி எதிரொலி; சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய பேனர் அகற்றம்!

Nakkheeran news echo Removal of banner containing controversial slogans

Advertisment

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியினர் வைத்த பேனரில் இடம்பெற்ற வாசகங்கள் பலரையும் முகம் சுளிக்கவைத்தது. அந்த பேனரில், செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அனைத்து இந்து சமுதாய ஒற்றுமை திருவிழா என்றும், இந்து எழுச்சி விநாயகர் சதுர்த்தி விழா எனவும் குறிப்பிடப்பட்டது. மேலும், ‘தமிழகத்திற்கு ஆபத்து’ என்றும், ‘குறைந்துவரும் இந்து ஜனத்தொகை! இந்து மதத்திற்கு மட்டும் குடும்பக் கட்டுப்பாடா? அனைத்து மதத்திற்கும் கட்டாயமாக்கு!’ என வில்லங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Nakkheeran news echo Removal of banner containing controversial slogans

விநாயக சதுர்த்தி விழாவுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை எந்த மதத்திற்கும் கட்டாயப்படுத்தவில்லையே?. அர்த்தமற்ற தேவையில்லாத வாசகங்களை, இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரைச் சீண்டும் வகையில் பேனர் வைப்பதா? காவல்துறை இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதா?’ என, அந்த இடத்தைக் கடந்துசெல்வோர் விமர்சிக்கும் வகையில் பிளக்ஸ் போர்டை வைத்திருந்தனர். மோசமான கருத்துகளையும், தமிழ்நாடு அரசை மதரீதியாக விமர்சிக்கும் வகையிலும், இந்த பிளக்ஸ் போர்டினை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் வைத்திருந்தனர். இதனை அகற்றுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Advertisment

Nakkheeran news echo Removal of banner containing controversial slogans

இந்நிலையில் ‘இந்து ஜனத்தொகை குறைகிறது’– இந்து முன்னணி வைத்துள்ள வில்லங்க பேனர்! என்னும் தலைப்பில் இன்று (8-9-2024) நக்கீரன் இணையத்தில், செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த விவகாரத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனின் கவனத்துக்குக் கொண்டுசென்றதைத் தொடர்ந்து, அவர் ‘பேனர் அகற்றப்பட்டுவிட்டது. வழக்குப் பதிவோம்’ என நக்கீரனுக்கு குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார்.

BANNER Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe