Advertisment

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி! கல்வெட்டில் ஒபிஎஸ் மகன் பெயர் மறைப்பு!!

துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குச்சனூர் சிலம்பு சனிஸ்வரன் கோவிலின் அருகே உள்ள தெற்கு பகுதியில் காசி ஸ்ரீ அன்னபூரணி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடந்த சில வருடங்களாக ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு வந்த நிலையில் கும்பாபிஷேகமும் நேற்று நடைபெற்றது.

Advertisment

நேற்றுகோவில் சுவற்றில் வைக்கப்பட்ட கல் வெட்டில் "குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு பேரூதவிபுரிந்தவர் இதய தெய்வம் மாண்புமிகு அம்மா செல்வி ஜெ‌.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர்". என்றும் மற்றொரு கல்வெட்டில்" குச்சனூர் ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு பேரூதவிபுரிந்தவர் துணை முதல்வர் ஒபிஎஸ். தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ‌பி. ரவீந்திரநாத்குமார் மதிப்பிற்குரிய ஒ‌பி‌ஜெயபிரதீப்குமார்" என்று கோல்டு கலரில் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழ் 16.5.2019 என தேதியும் போட்டபட்டிருத்தந்து. மே 23 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் முன்னரே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ops son

இந்த செய்தி நக்கீரன் இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இச்செய்தி வாட்சப், பேஸ்புக் மூலம் காட்டுத்தீ போல் பரவியதனை அடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் காதுக்கு எட்டியதின் பேரில் குச்சனூர் காசி அன்னபூரணி கோவில் நிர்வாகிகளிடம் பேசி அந்த கல்வெட்டியில் ஒபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமார் பெயருக்கு மேலே உள்ள "தேனி பாராளுமன்ற உறுப்பினர்" எழுத்தை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisment

ops son

அதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளுக்கு கோவில் நிர்வாகிகளும் கட்டுப்பட்டு ஒபிஎஸ் பெயர் மற்றும் ரவீந்திரநாத் குமார், பிரதீப்குமார் இருக்கும் ஒட்டு கல்வெட்டை மறைத்க்கும்படி மேல் புதிய ஒரு கல் வெட்டை பதித்து விட்டனர். இந்த விஷயம் தொகுதி முழுக்கவே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

elections ops son P Raveendranath Kumar Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe