Advertisment

நக்கீரன் ஆசிரியருக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் கடந்த காலத்தில் காணாமல் போனார்கள்: மு. ஞானமூர்த்தி கண்டனம்

nakkheeran gopal

நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு செந்துறை ஒன்றிய திமுக செயலாளர் மு.ஞானமூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

''நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால் அவர்களை இன்று அதிகாலை புனே செல்வதர்க்கு சென்னை விமான நிலையத்திற்க்கு வந்தவரை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

Advertisment

அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ கேசட் வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தைவெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும்போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும். அதைத்தான் நக்கீரன் பத்திரிக்கையும் செய்தது.

இந்த பிரச்சனையில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ஆளுனர் நிரபராதி என்றால் பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இடம் இந்த வழக்கை ஒப்படைத்திருப்பது சிலறை காப்பாற்றவே என்பதும், அண்மை காலமாக அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு எந்த மேல் நடவடிக்கையும் இல்லத்தை நாடு நன்கறியும்.

கடந்த காலத்தில் கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தூதராக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடிகரை விடுவித்து கன்னட தமிழ் மக்களை பாதுகத்தவர் நக்கீரன் கோபால்.

நக்கீரன் கோபால் அவர்களை கடந்த காலத்தில் எதிர்த்த ஜெயலலிதா , சசிகலா , நித்தியானந்தர் போன்றவர்கள் காணாமல் போனார்கள். கவர்னர் புரோகித்துக்கு புரோக்கராக செயல்பட்டு,நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்த முதல்வர் எடப்பாடி அவர்களே நீங்களும் எதிர்காலத்தில் காணாமல் போவீர்கள்.''

nakkheeran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe