புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (79) நேற்று (18.08.2021) உடல்நலக்குறைவால் காலமானார். தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், உடல்நலக்குறைவால் காலமானார்.

Advertisment

அவரது உடல், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதி ஊர்வலம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கலையும், நேரில் அஞ்சலியையும் செலுத்தினர். இந்நிலையில், இன்று நக்கீரன் ஆசிரியர், தமிழிசை தாயாரின் உடலுக்குநேரில் சென்று அஞ்சலி செலுத்தி, தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அதுசமயம்திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் தமிழிசை தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.