மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும்விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களும், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சங்கரய்யா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மக்கள் அஞ்சலிக்காக கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சங்கரய்யாவின் உடலுக்கு ‘நக்கீரன்’ ஆசிரியர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.