Skip to main content

நக்கீரன் ஆசிரியர், இந்து என்.ராம், மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு! (படங்கள்)

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
e1

 

ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் நேற்று முன் தினம் காலையில் கைது செய்யப்பட்டார்.   10 மணி நேர சட்டப்போராட்டத்திற்கு பின்னர் மாலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.  ஆசிரியரின் விடுதலை மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது என்று ஊடகத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,  சென்னை பெரியார் திடலில் ’‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்,- பாராட்டும்’ எனும் தலைப்பில் இன்று  11.10.2018 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு  நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

எ2

 

கூட்டத்தில் விடுதலை பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்து உரையாற்றுகிறார். முரசொலி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனசக்தி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்து என்.ராம், மணிச்சுடர் சார்பில் கே.ஏ.எம்.அபுபக்கர், மக்கள் உரிமை சார்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, தீக்கதிர் பொறுப்பாசிரியர் அ.குமரேசன், கலைஞர் தொலைக்காட்சி ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்ரினார்கள். 

 

33e4

 

இக்கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பாராட்டப்பட்டார். 

   அவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.   இந்த சட்டப்போராட்டத்திற்கு உறுதுணையாக நின்ற இந்து என்.ராமுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் கி.வீரமணி.   இப்போராட்டத்திற்கு குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்தார் கி.வீரமணி.

 

e5

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Next Story

“பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க” - பார்த்திபன் நக்கல்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
parthiban about bjp

சென்னையில் நடந்த ஓட்டல் திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நக்கீரன் ஆசிரியர் ஓட்டலுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பின்பு பேசிய பார்த்திபன், “உள்ள நுழையும்போது பார்த்திபனா வந்தேன். ஆனா ரிப்பன் கட் பண்ணும்போது என்னை செல்வமணி போல் ஆக்கிட்டாங்க. தலை நிறைய ரோஜா. செல்வமணி தான் ரோஜாவை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுவார். இங்க இருக்கிற எல்லாமே ரசனையோடு இருக்கு. உலகத்தில் மக்கள் தொகை தோன்றுவதற்கு காரணம் ஃபர்ஸ்ட் நைட் தான். ஆனா ஃபர்ஸ்ட் டே-வை இவ்ளோ சிறப்பா கொண்டாடினது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எல்லா தரத்து மக்களும் நல்ல விதமான ரசனையுடன் கூடிய ஒரு ஹோட்டலில் சாப்படணும்னு ஆசைப்படுறாங்க. விலை பத்தி கவலைப்படுவதில்லை. 

காஃபியின் மேல இருக்கிற நுரையில் தாமரை பூவெல்லாம் போட்ருப்பாங்க. அதை பார்த்தாலே டேஸ்டாயிருக்கும். ஏதோ பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க. அதுல இலை மாதிரியும் போட்ருப்பாங்க” என நக்கல் கலந்து நையாண்டியுடன் பேசினார். மேலும் அவர் தற்போது இயக்கி வரும் டீன்ஸ் படம் குறித்து சொன்ன அவர், “எப்பவுமே வித்தியாசமான முயற்சிலாம் பண்ணுவேன். ஆனா இந்த முறை ரொம்ப வித்தியாசமா கலக்‌ஷனுக்காக படம் பண்ண போறேன். இதுவரை பண்ண முயற்சிகள் எல்லாம் பரிட்சார்த்தமானதா இருக்கும். அதிலிருந்து வித்தியாசப்பட்டு இந்த படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார்.