vaiko

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களைஅடையாறு சரகபோலீசார்கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில்வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியைநிர்மலாதேவி விவகாரம்தொடர்பானகட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் ஆசிரியர் நக்கீரன் கோபால்கைது செய்யப்பட்டார்.

Advertisment

முதலில் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறப்பட்டு அலைக்கழிப்பு செய்யப்பட்ட நிலையில் அவரைசிந்தாதிரிப்பேட்டை ஜாம்பஜார்காவல்துணைஆணையர் அலுவலகத்தில் வைத்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்பஜார்காவல்துணைஆணையர் அலுவகத்தில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Advertisment

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆசிரியர்நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்குகண்டனம் தெரிவித்துள்ளார்.