Nakkeeran News Effect-Extra SP job swap

தண்டிக்கும் டிஐஜி-விடுவிக்கும் கூடுதல் எஸ்.பி-வேடிக்கை பார்க்கும் உளவுத்துறை! என்கிற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் கடந்த 18ம் தேதி செய்தி வெளியானது. திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பொதுமக்களிடம் இருந்து உளவு போலீஸ் மீது வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார். ஆனால் கூடுதல் எஸ்.பி. குணசேகரன் தண்டிக்கப்பட்டவர்களை அனுசரித்து மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி அனுப்பிகிறார்என்றும், இதை எல்லாம் கவனிக்க வேண்டிய மாநில உளவுத்துறை தூங்கி இருக்கிறது என்று செய்தி வெளியாகியிருந்தது.

Advertisment

Advertisment

 Nakkeeran News Effect-Extra SP job swap

செய்தி வெளியானவுடன் விழித்து கொண்ட மாநில உளவுத்துறை இரவோடு இரவாக கூடுதல் எஸ்.பி. குணசேகரன் குறித்த தகவல்களை சேகரித்தும், நக்கீரன் செய்தியையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். நக்கீரன் செய்தியின் எதிரொலியாக திருச்சி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குணசேகரனை நாமக்கல் கூடுதல் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள்.