கோவை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கரோனாதொற்று ஏற்பட்டதை முதன் முதலாக நக்கீரன் இணையத்தளம் செய்தியாகவெளியிட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சியளிக்ககூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல்கரோனாநோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மாணவர்களைச் சக மணவர்களோடு தங்க வைத்தது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகின.

Advertisment

dean

ஏற்கனவே கோவை மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் மீது மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சட்டவிரோத கேன்டீன் அனுமதிக்கப்பட்டது தொடர்பானகுற்றச்சாட்டும் இருந்தது. இந்நிலையில் நக்கீரன் செய்தியை அடுத்து அசோகன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.