தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(21.12.2021) மாலை மறைந்தார். கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த அவரை, கலைஞர் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக அவரை நியமித்துக்கொண்டார்.

Advertisment

இவரது மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணீர்விட்டார். மேலும், இன்று இரவு மீண்டும் சண்முகநாதன் வீட்டிற்குச் சென்றுஅரை மணி நேரம் அங்கிருந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், நக்கீரன் ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.